Loading . . .




சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்துதல் விவகாரம் :லாரி தொழிலுக்கு மூடு விழா

The Forecast 3 years ago கோவை

கோவை, மார்ச் 15: நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 815 தேசிய நெடுச்சாலை சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 53 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதுதவிர மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனிடையே சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால்  லாரி உரிமையாளர்கள் என பல தரப்பினரின் வாழ்வாதாரம் முடங்கும் அளவிற்கு உள்ளது என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் லாரி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் போது எல்லாம் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பலரும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் தன்ராஜ் கூறுகையில், \" தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்திக்கொண்டே சென்றால் இத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு இதனை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் முறை வேண்டும். இதை வலியுறுத்தி தான் பல்வேறு சங்கங்கள் போராடி வருகிறோம். தற்போது ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடி கட்டண முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே 4.5 லாரிகளில் 1 லட்சம் லாரிகள் பைனான்ஸ் கட்ட முடியாமல் சீஸ் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் லாரிகள் ஸ்கிராப்பிற்கு சென்றுவிட்டன. தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டாலும் கூட வாடகை கட்டணம் உயர்த்த முடியாது. மக்களால் அந்த வாடகையை கொடுக்க முடியாது. லாரி தொழிலுக்கு மூடு விழா தான் நடத்த வேண்டும்.இதனால் லாரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எலெக்ட்ரிசீயன், பெயிண்டர், பாடி கட்டுவோர், மெக்கானிக், உரிமையாளர்கள், ஒட்டுநர்கள், கிளினர்கள் என 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்,’’ என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News