Loading . . .




மாநகராட்சி பகுதிகளில் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள்

The Forecast 3 years ago கோவை

கோவை, மார்ச் 21: கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.5ல் வலியம்பாளையம் பகுதி, வார்டு எண்.6ல் வீரீயம்பாளையம் பகுதி, வார்டு எண். 7 மற்றும் 8ல் காளப்பட்டி நேரு நகர் பள்ளியிலும், வார்டு எண்.55ல் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி மாநகராட்சி பள்ளியிலும், வார்டு எண்.56ல் சூர்யா நகர் - ரயில்வே கேட் பகுதியிலும், வார்டு எண்.57-ல் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியிலும் நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு எண்.17ல் கவுண்டம்பாளையம்- சேரன் நகர்- தண்ணீர் தொட்டி அருகிலும், வார்டு எண்.34-ல் கவுண்டம்பாளையம் -மஞ்சீஸ்வரி காலனி- விநாயகர் கோவில் வளாகத்திலும், மற்றும் வார்டு எண்.37-ல் வடவள்ளி கல்வீராம்பாளையம்- மாகாளியம்மன் கோவில் வளாகத்திலும் நடைபெறவுள்ளது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.88-ல் தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்திலும், வார்டு எண்.90ல் கோவைபுதூர்-பாரதி நகரிலும், 99-ல் சித்தண்ணபுரம்- மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் வார்டு எண்.100ல் கணேசபுரம்- முத்து நகரிலும் நடைபெறவுள்ளது.


வடக்கு மண்டலம் வார்டு எண்.15ல் சுப்ரமணியம்பாளையம்- வார்டு அலுவலகம் அருகிலும், வார்டு எண் 19ல் மணியகாரம்பாளையம்- அம்மா உணவகம், வார்டு எண்.25ல் காந்தி மாநகர் - அரசு மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் வார்டு எண் 28ல் காமதேனு நகர் - வார்டு அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா, சங்கனூர் நாராயணசாமி வீதியிலும், வார்டு எண்.62ல் சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு எண்.63ல் ஒலம்பஸ்-80 அடி ரோட்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும், வார்டு எண் 80ல் கெம்பட்டி காலனி -மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் மற்றும் வார்டு எண்.84ல் ஜி.எம். நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

மேலும், வரும் 31ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News