ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு
The Forecast 3 years ago கோவை
கோவை, மார்ச் 24 கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற அருகே பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த கவிதா மீது அவரது கணவர் சிவாக்குமார் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் இந்துமதி விரைவாக செயல்பட்டு, சிவாக்குமாரை விரட்டிப் பிடித்ததற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பெண் தலைமை காவலரின் வீர தீர செயலை வெகுவாக பாராட்டி ரூ.5000 பண வெகுமதி வழங்கினார்.
0 Comments