Loading . . .




உலக அளவில் ஐ.டி. நிறுவனங்களின் ஆட்குறைவு நடவடிக்கையால்பு திதாக படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் கல்வியாளர்கள் தகவல்

The Forecast 3 years ago கோவை

கோவை, மார்ச் 26: உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களான கருத்தப்படும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், விப்ரோ உள்ளிட்ட  பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த வருடம் துவங்கியதில் இருந்து இந்நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஜனவரி 5ம் தேதி அமேசான் நிறுவனத்தில் இருந்து 18 ஆயிரம் பேரும், ஜனவரி 18ம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து 10 ஆயிரம் பேரும், ஜனவரி 20ம் தேதி கூகுள் நிறுவனத்தில் இருந்து 12 ஆயிரம் பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது அசென்ஞர் நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை துவங்கியுள்ளது.

இது போன்று மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் நிதி நிலைமைகளை சீர் செய்து கொள்ளவும், தற்போது நிலவும் உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து தற்காத்து கொள்ளவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனங்களை பின்பற்றி பல்வேறு நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதனால் ஐடி மற்றும் ஐடி அல்லாத நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

2023ம் ஆண்டு துவக்கம் முதலே ஆள்குறைப்பு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் கூடுதல் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை உலக அளவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர்.

 இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு நிறுவனங்களும் இதே போல் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை சிறுக சிறுக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே துவங்கி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில்  தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பை தேடும் மாணவர்களும், இளைஞர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் ஆள்குறைப்பு நடவடிக்கையால் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வியாளரும் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனருமான நளின் விமல்குமார் கூறுகையில்,

பணிநீக்கம் நடவடிக்கைகள் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

புதிய ஆட்சேர்ப்புகளில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும், ஏனெனில் நிறுவனங்கள் செலவை மிச்சப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவையைத் தொடரவும் புதியவர்களை நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைக்கு அமர்த்தும்.

ஐ.டி.நிறுவனங்களின் அதிவேக எழுச்சியின் பொருளாதாரம் மற்றும் இயக்கவியலை விமர்சன ரீதியாக புரிந்துகொள்வதில் மாணவர்கள் இந்த நாட்களில் மிகவும் புத்திசாலிகள்.

கல்வி நிறுவனங்கள் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள மாணவர்களின் மனதை உருவாக்குவதற்கும், எல்லாவற்றின் மத்தியிலும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்  கட்டமைப்பைக் கொண்டுள்ளது, என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News