Loading . . .




95வது வார்டில் ரூ.48 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

The Forecast 3 years ago கோவை

கோவை, மார்ச் 28: கோவை மாநகராட்சியில் புதியதாக தார் சாலை அமைத்தல், சாலைகளை சீர்செய்தல் உள்ளிட்ட சாலைப்பணிகள் முழு வீச்சல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி 95வது வார்டுக்குட்பட்ட போத்தனூர் கருப்பராயன் கோவில் வீதி முதல் மதீனா நகர் வரை ரூ.48 லட்சத்தில் புதியதாக தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைவார்கள். மேலும் உக்கடம் வருவதற்கும், பாலக்காடு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் உள்ள மெயின் ரோடுகளை இணைக்கும் சாலையாக இந்த பகுதி சாலை உள்ளது. இதுகுறித்து 95வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இச்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது தான் இச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநகராட்சி முழுவதும் அனைத்து சாலைப்பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News