கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய என 5 மண்டலங்கள் உள்ளன. சுமார் 6500 தெருக்கள் உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வரியினங்கள் உள்ளன. சென்னைக்கு அடுத்து வருவாயில் கோவை மாநகராட்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. 15 லட்சம் குடும்பங்கள் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். கோவை மாநகராட்சியின் நிர்வாக சுமையை குறைப்பதற்காக கூடுதலாக துணை கமிஷனர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் பதவிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சிவக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
0 Comments