கோவை, மே 11: கோவை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் மழை நீரை சேமித்து குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், பொது இடங்கள் என 250க்கும் மேற்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், புதிதாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கவும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் மழை நீரை சேமித்து குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் மழை நீரை சேமித்து குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள கட்டிடங்களில் இது விரைவில் நிறைவேற்றப்படும்’’ என்றார்.
0 Comments