Loading . . .




விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 26ம் தேதி நடக்கிறது

The Forecast 3 years ago கோவை

கோவை, மே 23: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் வரும் 26ம் தேதி நேரடியாக நடத்தப்பட உள்ளது. இதன்படி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தள கூட்ட அரங்கில் அன்று காலை 10.30மணிக்கு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது. முன்னதாக காலை 9.30 மணிக்கு மே மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் நடக்கிறது.

கோவை மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News