Loading . . .




கோவை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு கோவை, ஜுன் 2

The Forecast 3 years ago கோவை

தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

அதன் படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். 

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News