Loading . . .




இறுதி கட்டத்தை எட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்

The Forecast 3 years ago கோவை

கோவை, ஜூன் 4: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வ.உ.சி பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி நிர்வாகம் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. நீர்நிலை சீரமைப்பு பணி என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. வாலாங்குளத்தின் கரைகளும் ரூ.40 ேகாடிக்கும் அதிகமான தொகையில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் ரூ.31.47 ேகாடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த குளங்களை தொடர்ந்து நரசாம்பதி, கொலராம்பதி, செல்வாம்பதி, சிங்காநல்லூர், குறிச்சி குளங்களை சீரமைப்பு பணிகள் சுமார் ரூ,200 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.40.70 கோடியில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலைப்பணிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் ஆசியா அளவில் மிகப்பெரிய அளவில் மீடியா அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் அனைத்து ஸ்மார்ட் சிட்டி பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் கூறுகையில், ‘‘ ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அனைத்து பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. குறிச்சி குளத்தில் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,’’ என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News