Loading . . .




சாலையோர வியாபாரிகளுக்கு போலி அடையாள அட்டை?நடவடிக்கை எடுக்க நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் கோரிக்கை

The Forecast 3 years ago கோவை

கோவை, ஜூன் 27: சாலையோர வியாபாரிகளுக்கு கோவை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டைகள் மட்டுமே செல்லும், போலி அடையாள அட்டைகளால் எந்த பயனும் இல்லை என நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மணி கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிகள் மாநகராட்சி சார்பாக நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாநகராட்சி சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை கிடைத்தால்தான் வங்கிகளில் கடன் வசதி, ஒன்றிய, மாநில அரசுகளுக்களின் திட்ட பயன்கள், சலுகைகள் போன்றவைகள் கிடைக்கும்.

இதனிடையே சில தனி நபர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றனர். சில சாலையோர வியாபாரிகள் அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டைபோல் இதனை கருதி ஏமாந்து போகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையீட்டு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். வியாபாரிகள் ஏமாந்து போகாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News