Loading . . .




சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 343-வது வாரியக் குழுக் கூட்டம்

The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை

 நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்களின் தலைமையில் இன்று (23.11.2022) தலைமைச் செயலகத்தில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 343-வது வாரியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு. இரா. கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு. ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப., மற்றும் வாரிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகத் துறை Relateted News

Latest News